உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக வளம் வருபவர் 38 வயதான சுவிஸ் நாட்டின் ரோஜர் ஃபெடரர். இவர் இது வரை 20 முறை டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்று, உலகின் அதிக முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.
இவரின் சாதனைகளை கௌரவிக்கும் விதத்தில் அந்நாட்டு அரசு ஃபெடரரின் பெயரில் நாணயம் ஒன்றை வெளியிட்டு, அதனை புழக்கத்திலும் விட்டுள்ளது. மேலும் உயிருடன் இருக்கும் பிரபலங்களில் தன்னுடைய நாணயத்தைப் பார்க்கும் முதல் நபராகவும் ஃபெடரர் சாதனைப் படைத்துள்ளார்.
சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஃபெடரர் நாணயத்தில் ஒரு பக்கம், ஃபெடரரின் உருவப்படத்துடன் அவரின் முழுப் பெயரும், மறுபக்கம் நாணயத்தின் மதிப்பும் அச்சிடப்பட்டுள்ளது.
இதனை அறிந்த உலகம் முழுதும் உள்ள ஃபெடரர் ரசிகர்களும், டென்னிஸ் ரசிகர்களும் சுவிஸ் அரசாங்கத்திற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
-
Thank you Switzerland🇨🇭and Swissmint for this incredible honour and privilege. 🙏#DankeSchweiz#MerciLaSuisse#GrazieSvizzera#GraziaSvizra pic.twitter.com/gNs6qYjOh6
— Roger Federer (@rogerfederer) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you Switzerland🇨🇭and Swissmint for this incredible honour and privilege. 🙏#DankeSchweiz#MerciLaSuisse#GrazieSvizzera#GraziaSvizra pic.twitter.com/gNs6qYjOh6
— Roger Federer (@rogerfederer) December 2, 2019Thank you Switzerland🇨🇭and Swissmint for this incredible honour and privilege. 🙏#DankeSchweiz#MerciLaSuisse#GrazieSvizzera#GraziaSvizra pic.twitter.com/gNs6qYjOh6
— Roger Federer (@rogerfederer) December 2, 2019
இதையும் படிங்க: டேவிஸ்கோப்பை வெற்றி இந்தியாவுக்கு முக்கியமானது : லியாண்டர் பயஸ்!