ETV Bharat / sports

எம்மாடியோ... நீங்க வேற லெவல்! #FEDERER1500

உலகின் முன்னணி நட்சத்திர வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சர்வதேச டென்னிஸ் வரலாற்றில் 1,500 வெற்றிகளைப் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

FEDERER1500
author img

By

Published : Oct 22, 2019, 9:21 AM IST

FEDERER1500 - சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் ஸ்விஸ் இண்டோர் பேசல் டென்னிஸ் தொடரில் அந்நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக் சுற்று ஆட்டத்தில் ஃபெடரர் ஜெர்மெனியின் பீட்டர் கோஜோவ்ஸிக்கை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெடரர் முதல் செட் கணக்கை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அதன்பின் 53 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஃபெடரர் இரண்டாவது செட்டையும் 6-1 என்ற செட் கணக்கில் பீட்டரிடமிருந்து கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 4ஆம் சுற்று ஆட்டத்தில் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் பீட்டர் கோஜோவ்ஸிக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரர் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது 1,500 ஆவது வெற்றியைப் பெற்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இவருக்கு, பல்வேறு துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: #StockholmOpen: முதல் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார் ஷாபோலோவ்

Intro:Body:

swiss indoor tennis

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.