கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிச், அமெரிக்க வீரர் டென்னில் குட்லாவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் முதல் செட்டை 6-3 என கைப்பறிய் ஜோக்கோவிச், அடுத்த இரண்டு செட்டுகளையும், 6-2, 6-2 என கைப்பற்றினர். 92 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் நேர்செட்களில் வென்ற ஜோக்கோவிச் தொடர்ச்சியாக விம்பிள்டன் தொடரில் 11ஆவது முறையாக மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல் நடப்பு சாம்பியனான ஜோக்கோவிச், ஐந்தாவது முறையாக விம்பிள்டன் தொடரை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.