டென்னிஸ் விளையாட்டின் பிரபலமான தொடரான யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.05) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஜெர்மனியின் ஜேன் லெனார்ட் ஸ்ட்ராஃபை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜோகோவிச், முதல் இரண்டு செட்களையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஜேன் லெனார்டிற்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட்டிற்கான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் அந்த செட்டையும் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்குகளில் ஜேன் லெனார்ட்டை வீழ்த்தி, நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க:யூ.எஸ்.ஓபன் : டோமினிக் தீமிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த சுமித் நகல்!