நியூயார்க் (அமெரிக்கா): நடப்பாண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் முதல் சுற்று போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது.
இத்தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (செப்.12) நடந்த இறுதிப்போட்டியில், 18 வயதான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுக்கானு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். இதையடுத்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று (செப்.13) அதிகாலை 1.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது
இப்போட்டியில், உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் உடன் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மோதினார்.
ஜோகோவிச்சின் பின்னடைவு
போட்டியின் முதல் கேம்-ஐ ஜோகோவிச் தொடங்கிவைத்தார். தொடக்கத்தில் இருவருமே சற்று பதற்றமாக காணப்பட்டனர். இருப்பினும் முதல் கேமை டேனியல் மெட்வெடேவ் கைப்பற்றினார்.
அடுத்து, மெட்வெடேவ் அபாரமான சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் ஜோகோவிச் தொடக்கத்தில் மிகவும் தடுமாறினார். இதனால், மெட்வெடேவ் தனது சர்வீஸ் கேம்களை மிக எளிதில் கைப்பற்றினார். இதனால், வழக்கம்போல ஜோகோவிச் தனது முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்து பின்னடைவை சந்தித்தார்.
-
Sealed with an ace and a fist pump 💪
— US Open Tennis (@usopen) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Daniil Medvedev leads Djokovic by a set in the #USOpen final. pic.twitter.com/bTCkOvD3gF
">Sealed with an ace and a fist pump 💪
— US Open Tennis (@usopen) September 12, 2021
Daniil Medvedev leads Djokovic by a set in the #USOpen final. pic.twitter.com/bTCkOvD3gFSealed with an ace and a fist pump 💪
— US Open Tennis (@usopen) September 12, 2021
Daniil Medvedev leads Djokovic by a set in the #USOpen final. pic.twitter.com/bTCkOvD3gF
இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் சில ஆக்ரோஷ ஷாட்களை அடித்த ஜோகோவிச் தனது முதல் கேம்-ஐ எளிதில் வென்றார். கடந்த செட்டை போலவே இந்த செட்டிலும் மெட்வெடேவ்வின் சர்வீஸ்களில் ஜோகோவிச் கடுமையாக திணறினார்.
ரேக்கட்டை உடைத்த ஜோகோவிச்
முதல் செட்டில் நீண்ட ரேலி (Long rally) கேம்கள் பெரிதாக இல்லை. ஆனால், இரண்டாவது செட்டில் ஜோகோவிச், மெட்வெடேவ் பல நீண்ட ரேலிகளை விளையாடினர். இருப்பினும், ஜோகோவிச்சால் மெட்வெடேவ்வின் சர்வீஸ் கேம்களை வெல்லவே முடியவில்லை.
இதில், ஒரு லாங் ரேலி கேம்-ஐ இழந்த ஜோகோவிச், தனது டென்னில் ரேக்கட்டை தரையில் அடித்து உடைத்து கடும் விரக்தியை வெளிக்காட்டினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெட்வெடேவ் 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையையும் வென்று, தொடர்ந்து முன்னிலை பெற்றார்.
-
6️⃣➖4️⃣@DaniilMedwed grabs the second set over Djokovic. pic.twitter.com/TVYIBLdwkP
— US Open Tennis (@usopen) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">6️⃣➖4️⃣@DaniilMedwed grabs the second set over Djokovic. pic.twitter.com/TVYIBLdwkP
— US Open Tennis (@usopen) September 12, 20216️⃣➖4️⃣@DaniilMedwed grabs the second set over Djokovic. pic.twitter.com/TVYIBLdwkP
— US Open Tennis (@usopen) September 12, 2021
இதற்குமுன், இந்த இருவரும் மோதிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இதேபோல் தான் ஜோகோவிச் இரண்டு செட்கள் பின்தங்கியிருந்து, அதன்பின் மீண்டுவந்து சாம்பியன் பட்டத்தை அடித்திருந்தார் என்பது இங்கு கவனித்தக்கது.
திக்... திக்... நிமிடங்கள்
எனவே, ஜோகோவிச் மூன்றாவது செட்டில் முழுதிறனைக் வெளிப்படுத்துவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது செட்டின் முதல் மூன்று கேம்களையும் அடுத்தடுத்து ஜோகோவிச் இழந்து ஏமாற்றமளித்தார். மெட்வெடேவ் தனது வெற்றியை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தார்.
ஒரு சமயத்தில் மெட்வெடேவ் 5 கேம்களையும், ஜோகோவிச் 2 கேம்களையும் கைப்பற்றியிருந்தனர். மெட்வெடேவ் ஒரு கேம்-ஐ வென்றால் வெற்றி என்ற நிலையில், ஜோகோவிச் சற்றும் மனதளராமல் அடுத்தடுத்து இரண்டு கேம்களை வென்று மிரட்டினார்.
-
A simply stunning performance from @DaniilMedwed pic.twitter.com/0sF1r2CiNg
— US Open Tennis (@usopen) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A simply stunning performance from @DaniilMedwed pic.twitter.com/0sF1r2CiNg
— US Open Tennis (@usopen) September 12, 2021A simply stunning performance from @DaniilMedwed pic.twitter.com/0sF1r2CiNg
— US Open Tennis (@usopen) September 12, 2021
இருப்பினும், மெட்வெடேவ் ஜோகோவிச்சிற்கு பதிலடி கொடுத்து, மூன்றாவது செட்டையும் 6-4 என்று கைப்பற்றி தனது முதல் கிராண்டஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
தகர்ந்தது கனவு
ஜோகோவிச், இந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டென் என மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றிருந்த நிலையில், அமெரிக்க ஓபன் தொடரையும் வென்றிருந்தால் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஓர் ஆண்டின் அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்திருப்பார்.
-
Champ 🏆@DaniilMedwed | #USOpen pic.twitter.com/yFowNowygv
— US Open Tennis (@usopen) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Champ 🏆@DaniilMedwed | #USOpen pic.twitter.com/yFowNowygv
— US Open Tennis (@usopen) September 12, 2021Champ 🏆@DaniilMedwed | #USOpen pic.twitter.com/yFowNowygv
— US Open Tennis (@usopen) September 12, 2021
மேலும், ஓபன் எராவில் (OPEN ERA) அதிக கிராண்ட்ஸ்லாம் (21) பட்டத்தை பெற்றவர் என்ற மைல்கல்லையும் அடைந்திருப்பார். ஆனால், மெட்வெடேவ் ஜோகோவிச்சின் கனவை தகர்த்து, அவரின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தற்போது, முன்னணி வீரர்கள் ரபேல் நடால், ரோஜர் ஃபெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீரஜ் சோப்ரா பெற்றோரின் முதல் விமானப் பயணம்: கனவை நனவாக்கிய தங்க மகன்!