சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரரான பிரிட்டனின் ஆண்டி முர்ரே இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்டார்.
-
Mighty Murray 💪@andy_murray earns his biggest win of 2019 with a 7-6(2) 7-6(7) victory over World No. 13 Berrettini.#ChinaOpen pic.twitter.com/lCkosX2LYS
— Tennis TV (@TennisTV) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mighty Murray 💪@andy_murray earns his biggest win of 2019 with a 7-6(2) 7-6(7) victory over World No. 13 Berrettini.#ChinaOpen pic.twitter.com/lCkosX2LYS
— Tennis TV (@TennisTV) October 1, 2019Mighty Murray 💪@andy_murray earns his biggest win of 2019 with a 7-6(2) 7-6(7) victory over World No. 13 Berrettini.#ChinaOpen pic.twitter.com/lCkosX2LYS
— Tennis TV (@TennisTV) October 1, 2019
பரபரப்பான இந்த போட்டியில் ஆண்டி முர்ரே 7-6, 7-6 என்ற நேர் செட்கணக்கில் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற மற்றொரு ஆடவர் ஒற்றையர் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்; பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கெட்டை எதிர் கொண்டார்.
விறுவிறுப்பான இந்த போட்டியில் தீம் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கேஸ்கட்டிடமிருந்து கைப்பற்றினார். அதன் பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது செட்டையும் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி, தீம் கேஸ்கட்டை வீழ்த்தினார்.
-
6-4, 6-1 for Thiem against Gasquet. Strong display! pic.twitter.com/yqQrQfHogW
— China Open (@ChinaOpen) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">6-4, 6-1 for Thiem against Gasquet. Strong display! pic.twitter.com/yqQrQfHogW
— China Open (@ChinaOpen) October 1, 20196-4, 6-1 for Thiem against Gasquet. Strong display! pic.twitter.com/yqQrQfHogW
— China Open (@ChinaOpen) October 1, 2019
இதன் மூலம் டொமினிக் தீம் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரிச்சர்ட் கேஸ்கெட்டை வீழ்த்தி சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: பெலிண்டா பென்சிக்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த வீனஸ் வில்லியம்ஸ்!