ETV Bharat / sports

#RolexParisMasters: மெத்வதேவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட சார்டி!

author img

By

Published : Oct 30, 2019, 9:21 AM IST

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜெரமி சார்டி 4-6, 6-2, 6-4 என்ற செட்கணக்கில் டேனில் மெத்வதேவ் வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

RolexParisMasters

RolexParisMasters: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சு தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் இளம் நட்சத்திர வீரரான டேனில் மெத்வதேவ் பிரான்சின் ஜெரமி சார்டியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை மெத்வதேவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார். அதன்பின் ஆட்டத்தில் சுவாரசியத்தைக் கூட்டும் விதத்தில் இரண்டாவது செட் கணக்கை சார்டி 6-2 என கைப்பற்றி மெத்வதேவிற்கு அதிர்ச்சியளித்தார்.

பின்னர், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பிரான்சின் ஜெரமி சார்டி 6-4 என கைப்பற்றி டேனில் மெத்வதேவை வீழ்த்தினார். இதன் மூலம் டேனில் மெத்வதேவ் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றோடு வெளியேறினார்.

டேனில் மெத்வதேவ் - ஜெரமி சார்டி

இதற்கு முன்னதாக ரஷ்யாவின் மெத்வதேவ் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றவராவார். அதுமட்டுமில்லாமல் மெத்வதேவ் இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஆறு முறை பல்வேறு டென்னிஸ் தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #RolexShMasters: சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார் மெத்வதேவ்!

Intro:Body:

parry's masters

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.