ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ் இணை குரோசியாவின் நிக்கோலோ மெக்டிக், பிராங்கோ குகோர் இணையை எதிர் கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் நிக்கோலோ இணை முதல் செட் கணக்கை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக போபண்ணா இணை இரண்டாவது செட் கணக்கை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் நடைபெற்ற மூன்றாவது செட்டுக்கான ஆட்டத்தில் இரு இணை வீரர்களும் சம பலத்துடன் மோதியதினால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில் நிக்கோலோ இணை 11-09 என்ற புள்ளிகள் அடிப்படையில் போபண்ணா இணையை வீழ்த்தியது.
இதன் மூலம் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் குரோசியாவின் நிக்கோலோ, பிராங்கோ இணை 6-4, 5-7, 11-09 என்ற செட்கணக்கில் இந்தியாவின் போபண்ணா இணையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: #chinaopen: காலிறுதியில் பரம எதிரி குவிட்டோவை எதிர்கொள்ளும் ஆஷ்லி பார்ட்டி !