இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலியின் பெரெட்டினி, ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொண்டர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெரெட்டினி முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி தீமிற்கு அதிர்ச்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பெரெட்டினி இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி திமிற்கு ஷாக் கொடுத்தார்.
இதன் மூலம் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் லீக் ஆட்டத்தில் பெரெட்டினி 7-6, 6-3 என்ற நேர்செட் கணக்குகளில் டொமினிக் தீமை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: பாரம்பரிய விளையாட்டில் பட்டையைக் கிளப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்!