ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை சோஃபியா கெனின், துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூரை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கெனின் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெனின் இரண்டாவது செட்கணக்கையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஜாபூருக்கு அதிர்ச்சியளித்தார்.
-
🇺🇸 Semis for Sonya 🇺🇸@SofiaKenin advances to a first career Grand Slam final four downing Jabeur 6-4 6-4.#AusOpen | #AO2020 pic.twitter.com/NmMLbx1lhF
— #AusOpen (@AustralianOpen) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🇺🇸 Semis for Sonya 🇺🇸@SofiaKenin advances to a first career Grand Slam final four downing Jabeur 6-4 6-4.#AusOpen | #AO2020 pic.twitter.com/NmMLbx1lhF
— #AusOpen (@AustralianOpen) January 28, 2020🇺🇸 Semis for Sonya 🇺🇸@SofiaKenin advances to a first career Grand Slam final four downing Jabeur 6-4 6-4.#AusOpen | #AO2020 pic.twitter.com/NmMLbx1lhF
— #AusOpen (@AustralianOpen) January 28, 2020
இதன்மூலம் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை சோஃபியா கெனின் 6-4, 6-4 என்ற நேர்செட்கணக்குகளில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூரை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முதல் ஆளாக தகுதிப் பெற்றார்.
இதையும் படிங்க: மறைந்தார் 'பிளாக் மாம்பா' - கண்ணீரில் ரசிகர்கள்!