EuropeanOpen2019: டென்னிஸில் ஆடவர் பிரிவில் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், நோவாக் ஜோகோவிச் ஆகியோருக்கு அடுத்தபடியாக சிறந்த வீரராகத் திகழ்ந்தவர், கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே. இதுவரை மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவர், டென்னிஸ் தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தில் நிலைத்தவர். அதன் பின் காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார்.
தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஆண்டி முர்ரே, இந்த ஆண்டு ஜனவரியில் தான் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த முடிவு டென்னிஸ் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து அவர் தனது ஓய்வைத் தள்ளி வைத்து சில டென்னிஸ் தொடர்களில் பங்கேற்றார். ஆனால், அவரின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவில் அமையவில்லை. அதன் பின் தற்போது நாடந்து வந்த ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். இத்தொடரில் சிறப்பாக விளையாடிய முர்ரே டென்னிஸில் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இதன் மூலம் ஐரோப்ப ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஆண்டி முர்ரே, சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முர்ரே 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தாலும், அடுத்தடுத்து வந்த இரண்டு செட்களையும் 6-4, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி, வாவ்ரிங்காவுக்கு அதிர்ச்சியளித்தார்.
-
What a player. What a champion.
— ATP Tour (@atptour) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The winning moment for @andy_murray at the 2019 @EuroTennisOpen 🏆
🎥: @TennisTV pic.twitter.com/OrqZ3IuoS8
">What a player. What a champion.
— ATP Tour (@atptour) October 20, 2019
The winning moment for @andy_murray at the 2019 @EuroTennisOpen 🏆
🎥: @TennisTV pic.twitter.com/OrqZ3IuoS8What a player. What a champion.
— ATP Tour (@atptour) October 20, 2019
The winning moment for @andy_murray at the 2019 @EuroTennisOpen 🏆
🎥: @TennisTV pic.twitter.com/OrqZ3IuoS8
இதன் மூலம் ஆண்டி முர்ரே ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இதனால் பிரிட்டனின் ஆண்டி முர்ரே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏடிபி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: #WBBL05: 'ஒரு ரன் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகள் க்ளோஸ்' - போராடி தோற்ற சிட்னி சிக்சர்ஸ் அணி!