ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் ஷாங்காயில் நடைபெற்றுவருகிறது. இதன் முதல் சுற்றுப் போட்டியில் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரேவை எதிர்த்து அர்ஜெண்டின வீரர் ஜுவன் மோதினார்.
இந்தப் போட்டியின் முதல் செட்டை யாரும் எதிர்பார்க்காதவாறு, 2-6 என அர்ஹெண்டினா வீரர் ஜுவன் வெல்ல, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய முர்ரே 6-2 என்ற கணக்கில் வென்றார்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில், அதிரடியாக ஆடிய ஆண்டி முர்ரே 6-3 என எளிதாக வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
இதையும் படிக்கலாமே: 'கட்டுனா அவளைக் கட்டணும்டா' - பி.வி.சிந்துவுக்காக மீண்டும் காதல் மனு அளித்த முதியவர்!