பிரிட்டனைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே, இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இவர் இதனால் விம்பிள்டன் உள்ளிட்ட சில முக்கியமான டென்னிஸ் தொடர்களிலிருந்து விலகினார். அதன் பின் ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதாக இருந்தார். ஆனால் இன்று தனது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகுவதாக ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார்.
இது குறித்து முர்ரே கூறுகையில், 'இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு நான் டென்னிஸிலிருந்து காயம் காரணமாக விலகியிருந்தேன். எனினும் அடுத்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் எனது திறமைகளை வெளிப்படுத்தலாம் என நினைக்கும் போது, மீண்டும் காயமடைந்து தொடரிலிருந்து விலகுவது ஏமாற்றமளிக்கிறது' என்றார்.
-
We're sad to report that five-time finalist @andy_murray will not be playing in Australia in 2020 - can't wait to see you back here in 2021, Andy!
— #AusOpen (@AustralianOpen) December 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read More: https://t.co/XewT5XNmJb #AusOpen pic.twitter.com/L64nmFuwW5
">We're sad to report that five-time finalist @andy_murray will not be playing in Australia in 2020 - can't wait to see you back here in 2021, Andy!
— #AusOpen (@AustralianOpen) December 28, 2019
Read More: https://t.co/XewT5XNmJb #AusOpen pic.twitter.com/L64nmFuwW5We're sad to report that five-time finalist @andy_murray will not be playing in Australia in 2020 - can't wait to see you back here in 2021, Andy!
— #AusOpen (@AustralianOpen) December 28, 2019
Read More: https://t.co/XewT5XNmJb #AusOpen pic.twitter.com/L64nmFuwW5
மேலும், ஆன்டி முர்ரே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை எந்தத் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என அவரது பயிற்சியாளர் ஸ்காட் தெரிவித்துள்ளது டென்னிஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: லக்ஷமண் கனவை நிறைவேற்றிய விராட் கோலி!