ETV Bharat / sports

#RolexShMasters: மாஸ் காட்டிய ஃபெடரர், அதிரடியில் அசத்திய தீம் - காலிறுதிக்குள் கால்பதிப்பு!

author img

By

Published : Oct 10, 2019, 11:01 PM IST

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு, உலகின் முன்னணி வீரர்களான ரோஜர் ஃபெடரர், டொமினிக் தீம் முன்னேறியுள்ளனர்.

#RolexShMasters

#RolexShMasters: சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் டென்னிஸில் நட்சத்திர வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், பெல்ஜியத்தின் டேவிட் கோபினை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஃபெடரர் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் டேவிட் கோபினை வீழ்த்தி, ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டொமினிக் தீம் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் நிகோலஸ் பசிலாஷ்விலியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஏற்கெனவே, நோவாக் ஜோகோவிச், டெனில் மெத்வதேவ் போன்ற முன்னணி வீரர்கள் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #RolexShMasters: அடுத்த கோப்பைக்குத் தயாரான ஜோகோவிச்!

Intro:Body:

Shanghai open

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.