துபாய்: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று (அக். 31) மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, இந்திய அணிக்கு இஷான் கிஷன், ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பவர்பிளே ஓவர்களிலேயே சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரோஹித் 14 (14), கோலி 9 (17), பந்த் 12 (19) ரன்களில் ஆட்டமிழந்து பெரிதும் ஏமாற்றத்தை அளித்தனர்.
-
First win of the @T20WorldCup on the board in Dubai. Scorecard | https://t.co/VFvqgNFGXd #T20WorldCup pic.twitter.com/SI8xnPgR9z
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">First win of the @T20WorldCup on the board in Dubai. Scorecard | https://t.co/VFvqgNFGXd #T20WorldCup pic.twitter.com/SI8xnPgR9z
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2021First win of the @T20WorldCup on the board in Dubai. Scorecard | https://t.co/VFvqgNFGXd #T20WorldCup pic.twitter.com/SI8xnPgR9z
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2021
பதுங்கிய பாண்டியா
அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா 23 (24) ரன்களை மட்டும் சேர்த்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஜடேஜா சில பவுண்டரிகளை அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களை மட்டும் சேர்த்தது. நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், சோதி 2 விக்கெட்டுகளையும், சௌதி, மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
111 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூ. அணிக்கு குப்தில் - டைரில் மிட்செல் இணை நிதான தொடக்கத்தை அளித்தது. குப்தில் 20 ரன்களில் பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், வில்லியம்சன், மிட்செல் உடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை அணியை வெற்றி நோக்கி அழைத்துசென்றார்.
-
Things are getting pretty interesting 🤩
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Which two sides will qualify from Group 2? 🤔#T20WorldCup pic.twitter.com/2NSTjsYjoZ
">Things are getting pretty interesting 🤩
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
Which two sides will qualify from Group 2? 🤔#T20WorldCup pic.twitter.com/2NSTjsYjoZThings are getting pretty interesting 🤩
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
Which two sides will qualify from Group 2? 🤔#T20WorldCup pic.twitter.com/2NSTjsYjoZ
நாக்-அவுட்டா இந்தியா?
நியூசிலாந்து அணி 13ஆவது ஓவரில் 96 ரன்கள் எடுத்த நிலையில், மிட்செல்லை 49 ரன்களை எடுத்து பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும், 14.3 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி தனது வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்மூலம், இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ஆட்டநாயகனாக இஷ் சோதி தேர்வுசெய்யப்பட்டார்
-
Sensational New Zealand stun India in Dubai to leave them teetering on the edge. #INDvNZ report 👇 #T20WorldCup https://t.co/H3G4FuBbCV
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sensational New Zealand stun India in Dubai to leave them teetering on the edge. #INDvNZ report 👇 #T20WorldCup https://t.co/H3G4FuBbCV
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021Sensational New Zealand stun India in Dubai to leave them teetering on the edge. #INDvNZ report 👇 #T20WorldCup https://t.co/H3G4FuBbCV
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
இந்திய அணி, தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. அடுத்தவரும் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று, அதிக ரன்ரேட்டை பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவது மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: T20 WORLDCUP: நமிபியாவை வாரிசுருட்டிய ஆப்கானிஸ்தான்!