ETV Bharat / sports

கரோனா எதிரோலி: உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் ஒத்திவைப்பு! - சர்வதேச ஸ்னூக்கர் கூட்டமைப்பின் தலைவர்

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, இம்மாதம் தொடங்கவிருந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடர் ஜூலை மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

World Snooker Championships rescheduled due to COVID-19

author img

By

Published : Apr 23, 2020, 12:43 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை உலகம் முழுவதும் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாதம் இறுதியில் தொடங்குவதாக இருந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடர், தற்போது ஜூலை 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஸ்னூக்கர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஸ்னூக்கர் கூட்டமைப்பின் தலைவர் பேரி ஹியர்ன் (Barry Hearn) கூறுகையில், " ஸ்னூக்கர் வீரர்கள் சுயமாக இவ்விளையாட்டில் பங்கேற்பவர்கள். அவர்களுக்கு இதன் மூலம் மட்டுமே சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உலகில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக நாங்கள் வீரர்களின் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் முக்கியத்துவம் செலுத்த வேண்டியுள்ளது.

அதனால் நாங்கள் பார்வையாளர்களின்றி போட்டியை நடத்த விரும்பவில்லை. மேலும் விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்களுடன் நடைபெறும் போட்டியையே விரும்புவார்கள் என்பதால், இத்தொடரை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது மாற்றம் செய்யப்பட்ட அட்டவணையின் காரணமாக, ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தொடங்கவிருந்த உலக ஜூனியர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'இவர்களைப் போல் யாரையும் சந்தித்ததில்லை' - மைக்கேல் ஹஸ்ஸி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.