கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் சுமார் 100 மில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்குவதாக உலக ரக்பி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரக்பி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் இப்பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்காக, உலக ரக்பி கூட்டமைப்பு சார்பில், 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரண நிதியாக வழங்குகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வீரர்களின் ஓப்பந்த பட்டியல் குறித்து ஃபிஃபா ஆலோசனை!