கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிரதானமாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 27ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்த நிலையில் போட்டி ஏற்பட்டாளர்கள் பரிசுத் தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
கரோனா தாக்கம் காரணமாக 2020ஆம் தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில் , 2021ஆம் ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் குறைவான பார்வையாளர்களை கொண்டு போட்டி நடத்தப்பட்டது. இந்தாண்டு உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் தொடரில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டதால் , வெற்றி பெறும் வீரர் , வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆடவர் ஒற்றையர் , மகளிர் ஒற்றையருக்கு தலா 19.25 கோடி ரூபாய் வரை பரிசுத் தொகை உயர்த்தியும் , மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு 40 சதவீதம் வரை பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத்தொகை 392 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: ரஞ்சி கிரிக்கெட்: 92 வருட உலக சாதனையை முறியடித்த மும்பை அணி! 725 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி