ETV Bharat / sports

சிறு காயங்களுடன் தப்பித்த ஃபார்முலா 1 வீரர் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன்...!

பஹ்ரைன் கிராண்ட் பிக்ஸ் தொடரின்போது ஏற்பட்ட விபத்தில், ஃபார்முலா 1 ரேஸ் வீரர் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் சிறு காயங்களுடன் தப்பித்தார்.

watch-f1-driver-grosjean-escapes-after-crash-at-bahrain-gp

author img

By

Published : Nov 30, 2020, 1:19 PM IST

2020ஆம் ஆண்டு சீசனுக்கான பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நடந்து வருகிறது. இதன் நேற்றைய போட்டியின் தொடக்கத்தில் ஃபார்முலா 1 வீரர் ரோமெய்ன் க்ரோஸ்ஜீனின் கார் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக காரில் தீ பற்றியது.

இதனால் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் காரிலிருந்து வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்களோடு உடனடியாக உதவியாளர்கள் கார் அருகே சென்றனர்.

சிறு காயங்களுடன் தப்பித்த ஃபார்முலா 1 வீரர் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன்

அதற்குள் அவர் காரிலிருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் அவருக்கு சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த விபத்தால் சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் தொடங்கப்பட்ட ரேசில் ஃபார்முலா 1 சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: மேட்ச் ஜெய்க்கலனா என்னபா... இதயத்தை வென்ற இந்திய இளைஞர்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.