கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், அந்த நாடுகள் பலவும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக ஊக்கமருந்து தடுப்பாணையம், ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வாடா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏ.டி.ஒ.க்கு அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, தற்போது சேகரிக்கப்பட்டுவரும் வீரர்களின் ஊக்கமருந்து மாதிரிகளில் சில மாற்றங்களை கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக மாதிரிகள் சேகரிக்கும் இடம், ஆய்வகங்கள், போக்குவரத்து, மாதிரி பகுப்பாய்வு, மாதிரி முடிவுகள் வீரர்களுக்கு வழங்கும்போதே அவர்களின் உடல்நலம் குறித்தும் பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டுதல்களையும் வாடா உருவாக்கிவருகிறது. இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் அடுத்தவார தொடக்கத்தில் வெளியிடப்படவுள்ளது" என்றும் வாடா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து வாடாவின் தலைவர் விட்டோல்ட் பாங்கா (Witold Banka) கூறுகையில், "கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக விளையாட்டுத் துறை மிக மோசமான சூழ்நிலையைச் சந்தித்துவருகிறது. இந்தப் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புகளுக்கு வாடா அமைப்பு ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
அதன்படி வீரர்களின் கண்டறிதல் சோதனை மாதிரிகளில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்ற ஆய்வை மேற்கொள்ளும்படியும், வீரர்களை பரிசோதிக்கும்போதே கோவிட்-19 கண்டறிதல் சோதனை மேற்கோள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கோவிட்-19: பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்த விராட், அனுஷ்கா!