டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அர்ஜூனா விருது பெறுவதற்கு தகுதியான வீரர், வீராங்களைகளை ஒவ்வொரு விளையாட்டுச் சங்கமும் தேர்ந்தெடுத்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தன.
அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி, 26 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, இன்று ராஷ்ட்ரபதி பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை ஆர்.வைஷாலிக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அர்ஜூனா விருது, சான்றிதழை வழங்கினார்.
-
🏆#NationalSportsAwards🏆
— PIB India (@PIB_India) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
President Droupadi Murmu confers #ArjunaAward, 2023 on R Vaishali in recognition of her outstanding achievements in #Chess@rashtrapatibhvn#NationalSportsAwards pic.twitter.com/T0W7IGfCxg
">🏆#NationalSportsAwards🏆
— PIB India (@PIB_India) January 9, 2024
President Droupadi Murmu confers #ArjunaAward, 2023 on R Vaishali in recognition of her outstanding achievements in #Chess@rashtrapatibhvn#NationalSportsAwards pic.twitter.com/T0W7IGfCxg🏆#NationalSportsAwards🏆
— PIB India (@PIB_India) January 9, 2024
President Droupadi Murmu confers #ArjunaAward, 2023 on R Vaishali in recognition of her outstanding achievements in #Chess@rashtrapatibhvn#NationalSportsAwards pic.twitter.com/T0W7IGfCxg
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிட்டனில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் போட்டியில் மகளிர் பிரிவில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். டிசம்பர் மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபன் தொடரில் இரண்டு வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம், 2 ஆயிரத்து 501.05 புள்ளிகளைக் கடந்த வைஷாலி, இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.