நியூயார்க்: டென்னிஸ் தொடரின் முக்கிய தொடர்களாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் காணப்படுகின்றன. சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் கீழ் ஆண்டுதோறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரும், அதை தொடர்ந்து பிரஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்கள் நடைபெறுகின்றன.
இறுதியாக ஆண்டு இறுதியில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதிக்கு முன்னேறிய நட்சத்திர வீரரான நோவக் ஜோகோவிச் - பென் ஹெல்டனுடன் மோதினார்.
-
A 15th meeting awaits Sunday. pic.twitter.com/ZrUCzbwXDo
— US Open Tennis (@usopen) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A 15th meeting awaits Sunday. pic.twitter.com/ZrUCzbwXDo
— US Open Tennis (@usopen) September 9, 2023A 15th meeting awaits Sunday. pic.twitter.com/ZrUCzbwXDo
— US Open Tennis (@usopen) September 9, 2023
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-க்கு 3, 6-க்கு 2, 7-க்கு 6 (7-க்கு 4) என்ற செட் கணக்கில் பென் ஹெல்டனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். மற்றொறு அரைஇறுதி போட்டியில் ரஷியாவை சேர்ந்த டேனியல் மெட்வெடேவ் - ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸை எதிர்கொண்டார்.
இதையும் படிங்க: Neymar: பீலேவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த நெய்மர்! எதுல தெரியுமா?
இதில் 6-க்கு 3, 3-க்கு 6, 6-க்கு 1, 7-க்கு 6 (7-க்கு 3) என்ற செட் கணக்கில் மெட்வெடேவ், அல்கராஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் - டேனியல் மெட்வெடேவ் மோதுகின்றனர். இந்த இறுதி போட்டியானது வரும் செப்டம்பர் 11ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
36 வயதான ஜோகோவிச் இந்த வெற்றியின் மூலம் 36வது கிரண்ட்ஸ்லாம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். மேலும், இது அவரது 100வது யூஎஸ் பேட்டி என்பதும், 47வது அரைஇறுதி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் ஜோகோவிச் 87 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஒபன் டென்னிஸ் இறுதி போட்டிக்குள் நுழைந்த மற்றொறு வீரரான டேனியல் மெட்வெடேவ் இது குறித்து கூறுகையில்; "ஜோகோவிச் இதுவரை 23 கிரண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். நான் ஒரே ஒரு பட்டத்தை மட்டுமே வென்றுள்ளேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை அமெரிக்க ஒபன் இறுதி போட்டியில் வீழ்த்தினேன். அதை மீண்டும் செய்ய வேண்டும் என விரும்பிகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சனை நிராகரிக்கிறதா பிசிசிஐ? பின்னணி என்ன?