திருச்சி: திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்தவர் தனலட்சுமி. தடகள விளையாட்டு வீராங்கனையான இவர், சில மாதங்களுக்கு முன்பு தேசிய அளவில் நடந்த தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
இதனால், டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தகுதி சுற்றுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தற்போது பயிற்சி பெற்றுவரும் தனலட்சுமி, அங்கு நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பங்கேற்றார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட தனலட்சுமி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4×400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் - தேசியக்கொடி ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்