1.91 கிலோமீட்டர் (1.18 மைல்) வென்டூக்ஸ் என்பது ஒரு திகைப்பூட்டும் மலையேற்றம் ஆகும். சைக்கிள் போட்டியின் இறுதியில் எல்லைக்கோட்டை தொடும்போது அந்த நிலப்பகுதி நிலாவின் நிலப்பரப்பைப் போல் இருக்கும்.
மொத்தம் உள்ள 21 சுற்றுகளில் 11ஆவது சுற்றில் இருந்து, ரைடர்கள் வென்டூக்ஸை இரண்டு வெவ்வேறு நுழைவு புள்ளிகளிலிருந்து தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த சைக்கிள் ரேசின் இயக்குநர் கிறிஸ்டியன் ப்ருதோம் கூறுகையில், "டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் கால்பந்தாட்ட ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றுடன் தேதிகள் ஒத்துப்போகக் கூடாது என்பதற்காக ஜூன் 26 முதல் ஜூலை 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே இம்முறை தொடங்கவுள்ளோம்.
2021 சுற்றுப்பயணம் ஆரம்பத்தில் கோபன்ஹேகன் நகரத்திலிருந்து போட்டி தொடங்கப்பட்டது. அதில் டென்மார்க்கில் முதல் சுற்று ஆரம்பமானது. ஆனால் கரோனா தொற்றுநோய் காரணமாக கோபன்ஹேகன் சுற்றுப்பயணம் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, பிரிட்டனி நகரமான ப்ரெஸ்டில் போட்டி தொடங்கும். இந்தப் பாதை இந்த ஆண்டின் பாதையைவிட குறைவான மலைப் பகுதிகளைக் கொண்டது.
இதில் 17ஆவது சுற்றுதான் மிகவும் கடினமானது. கிழக்குப் பிரான்சில் வியர்சனில் இருந்து லு க்ரூசாட் வரை 248 கிலோமீட்டர் (154 மைல்) மலைப்பாங்கான பாதையை 21 ஆண்டுகளாக இந்த பந்தயம் கொண்டுள்ளது’’ என்றார்.
இதையும் படிங்க: பிவி சிந்து ஓய்வு இல்லை