ETV Bharat / sports

இந்திய குத்துச்சண்டை விளையாட்டின் முன்னோடிகள்! - லைஷ்ரம் சரிதா தேவி

சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்தவர்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்ததோடு மட்டுமல்லாமல், பதக்கங்களால் அதனை நிஜமாக்கியும் காட்டிய வீரர்களின் தொகுப்பு இதோ...

Top 5: The pioneers of Indian boxing
Top 5: The pioneers of Indian boxing
author img

By

Published : Apr 16, 2020, 11:05 AM IST

1880களில் இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் 1960களில் தான் ஒழுங்குபடுத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. அதன்பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என இந்திய வீரர்கள் தங்களை வெளிப்படுத்தியதன் மூலமாக, இவ்விளையாட்டிற்கென தற்போது தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த முன்னோடிகளைப் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்...

கேப்டன் ஹவா சிங்(Captain Hawa Singh):

இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டை மற்றொரு கோணத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை கேப்டன் ஹவா சிங்கையே சாரும். இவர் இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜக்தீஸ் சிங்கின் மாணவரும் ஆவர். மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவா சிங், 1966, 70களில் அடுத்தடுத்து இரண்டு ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனைப்படைத்தவர்.

கேப்டன் ஹவா சிங்
கேப்டன் ஹவா சிங்

மேலும், அந்த தசாப்தத்தில் ஆசியாவின் அசைக்க முடியா விரராகவும் வலம் வந்தார். அதேபோல் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிளில் தொடர்ச்சியாக 11 முறை(1960 - 1971) சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட பெருமையை பெற்றவர்.

ஹவா சிங்கின் சாதனைகள்
ஹவா சிங்கின் சாதனைகள்

அதன் பின் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற கேப்டன் ஹவா சிங், அதன் பிறகு இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் மூலமாக குத்துச்சண்டை பிரிவை உருவாக்கவும் உருதுணையாக அமைந்தார். குத்துச்சண்டை விளையாட்டில் இவரின் சேவையைப் பாராட்டி இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான துரோணாச்சாரியா விருதையும் பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விருது வழங்கும் விழாவிற்கு 15 நாட்கள் இருந்த நிலையில் உயிரிழந்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான், ஹவா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிங்கோ சிங்(Dingko Singh)

இந்தப் பட்டியளில் அடுத்த இடத்தைப் பிடித்தவர் டிங்கோ சிங். மேரிகோர் மணிப்பூரை தலைப்பு செய்திகளில் காட்டுவதற்கு முன்பே, அதற்கான விதையை விதைத்தவர் பாண்டம்வெயிட் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் தான். இவரின் வருகைக்கு பின்னரே இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டிற்கு பல வீரர்களை வரவழைக்க ஊக்கமளித்தது.

டிங்கோ சிங்
டிங்கோ சிங்

1997ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற கிங்ஸ் கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில் கோப்பையைக் கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமையைத் தேடித்தந்தார். அதன்பின் அடுத்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டிகளிலும், குத்துச்சண்டைப் பிரிவில் தங்கம் வென்று சாதனைப்படைத்தார்.

டிங்கோ சிங்கின் சாதனைகள்
டிங்கோ சிங்கின் சாதனைகள்

பின்னர் ஏற்பட்ட தொடர் காயம் காரணமாக குத்துச்சண்டை விளையாட்டில் அவரால் நீண்டகாலம் பயணிக்க முடியவில்லை. இருப்பினும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் 1998ஆம் ஆண்டு இந்திய அரசின் அர்ஜுனா விருதையும், 2013ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் இந்திய அரசு வழங்கி கவுரவித்தது.

விஜேந்திர சிங்(Vijender Singh)

அடுத்ததாக குத்துச்சண்டை விளையாட்டை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்த்த பெருமை விஜேந்திர சிங்கையே சாரும். ஏனெனில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டைப் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்திய ஆடவர் விஜேந்திர சிங் மட்டும் தான். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தான் இவர் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்தார்.

விஜேந்தர் சிங்
விஜேந்தர் சிங்

இவரின் சாதனைக்குப் பிறகே இந்தியாவில் பாக்ஸிங் லீக், இந்தியன் பாக்ஸிங் லீக் போன்ற தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் தற்போதுள்ள வீரர்களுக்கான ஸ்பான்ஸர்ஷிப், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சர்வதேச பிராண்டுகளிடமிருந்து பெருவதற்கான வழிவகையை ஏற்படுத்தித் தந்த பெருமையும் விஜேந்தர் சிங்கையே சாரும்.

விஜேந்தர் சிங்கின் சாதனைகள்
விஜேந்தர் சிங்கின் சாதனைகள்

விஜேந்திர சிங் இதுவரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தை வென்றது மட்டுமில்லாமல், 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும், இருமுறை காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

விஜேந்தர் சிங்கின் சாதனைகள்
விஜேந்தர் சிங்கின் சாதனைகள்

லைஷ்ரம் சரிதா தேவி(Laishram Sarita Devi)

இந்தியாவில் குத்துச்சண்டை ஆடவர் விளையாட்டு என்ற கருத்தை தனது அதீத திறமையால் பொய்யாக்கிய வீரமங்கை லைஷ்ரம் சரிதா தேவி. மணிப்பூரைச் சேர்ந்த இவர், இந்திய மகளிர் குத்துச்சண்டை விளையாட்டை மற்றொரு பரிணாமத்திற்கு அழைத்துச் சென்றவர்.

லைஷ்ரம் சரிதா தேவி
லைஷ்ரம் சரிதா தேவி

இவர் நான்கு முறை ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கத்தையும், ஒரு முறை உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தியவர். இவர் இச்சாதனைகளைப் புரிய மற்றுமொரு காரணமாக அமைந்தது உலக குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை தனது ஆலோசகராகப் பெற்றதும் தான்.

லைஷ்ரம் சரிதா தேவியின் சாதனைகள்
லைஷ்ரம் சரிதா தேவியின் சாதனைகள்

ஆனால் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனக்கு கிடைத்த வெண்கலப்பதக்கத்தை ஏற்க மறுத்தால் சர்ச்சைக்குள்ளானார். அத்தொடரில் சரிதாவின் அணுகுமுறை சரியானது என பலர் உணர்ந்தாலும், பதக்கத்தை அவமரியாதை செய்ததாக ஐபிஏ சரிதாவை இடைநீக்கம் செய்தது.

சரிதா தேவியின் சாதனைகள்
சரிதா தேவியின் சாதனைகள்

பின்னர் 2019ஆம் ஆண்டு சர்வதேச குத்துச்சண்டை தடகள அமைப்பில் உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரி கோம்(Mary kom)

தற்போதுள்ள பட்டிதொட்டிக்கு கூட இவரது பெயர் தெரியும் என்றால் அது மிகையல்ல. குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவிற்கு மாபெரும் மகுடத்தை சூட்டிய சிங்க பெண் மேரி கோம். அதற்கான காரணம் அனைத்து வகையான சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டுகளிலும் வெற்றியை ஈட்டி இந்தியாவின் பெயரை உரக்க ஒலிக்கச் செய்ததுதான்.

மேரி கோம்
மேரி கோம்

குத்துச்சண்டை வரைபடத்தில் இந்தியாவுக்கான முத்திரையை விஜேந்திர சிங் பதித்து கொடுத்திருந்தாலும், அதனை நிலைநிறுத்திய பெருமை மேரி கோமிற்கே உரித்தானது. ஏனெனில் மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில் ஆறு முறை உலகச் சாம்பியன் பட்டத்தையும், 2012 ஒலிம்பிக் தொடரில் வெண்கலப்பதக்கத்தையும் வென்று உலக அரங்கில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்.

மேரி கோமின் சாதனைகள்
மேரி கோமின் சாதனைகள்

இவ்விளையாட்டிற்காக ஆரம்ப காலத்தில் பலவற்றை இழந்த மேரி கோம், தற்போது அவற்றையெல்லாம் தனது பதக்கங்களைக் கொண்டு பூர்த்திசெய்துள்ளார். மேலும் இவர் ஐந்து முறை ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கத்தையும், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் தலா ஒரு தங்கப்பதக்கத்தையும் பெற்று குத்துச்சண்டை உலகில் இந்தியாவின் பெயரை வானுயர்த்தி பறக்கச் செய்தார்.

மேரி கோமின் சாதனைகள்
மேரி கோமின் சாதனைகள்

இதனால், தற்போதுள்ள இந்திய பெண்கள் பலருக்கு முன்மாதிரியாகவும் வலம்வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இம்பாலில், பெண்களுக்கான குத்துச்சண்டை பயிற்சி மையத்தையும் உருவாக்கி, சிறுமிகளுக்கு பயிற்சியளித்தும் வருகிறார்.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்த பிசிசிஐ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.