2020ஆம் பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை வழிநடத்துபவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதை இந்திய பாரா ஒலிம்பிக் குழுத் தலைவர் தீபா மாலிக் தெரிவித்துள்ளார்.
போட்டித் தொடக்க விழா அன்று மாரியப்பன் கையில் தேசியக்கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்லவுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் தேசியக்கொடியை ஏந்திச் செல்ல இருப்பது இதுவே முதல்முறை.
2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று சாதனைபுரிந்தார். பத்ம ஸ்ரீ, கேல் ரத்னா உள்ளிட்ட, நாட்டின் முன்னணி விருதுகளை மாரியப்பன் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: அக்டோபரில் தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை திருவிழா!