கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜுலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை ஒலிம்பிக் தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தலைவர் கேசி வாசர்மேன் பேசுகையில், '' கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பின், 2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் மூலம் உலகை ஒன்றிணைக்க மிகச்சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதாக நினைக்கிறேன்.
இதன் மூலம் கரோனாவால் மனதளவில் துவண்டு போயுள்ள மக்களின் ஆர்வத்தையும், ஒலிம்பிக் பற்றிய மக்களின் எண்ணத்தையும் உயர்த்த முடியும். வியாபார ரீதியாகவோ, பிரச்னைகளின்போதோ நாம் தொலைந்துபோகும்போது ஒரு விளையாட்டின் மூலம் நமது அடித்தளத்தைக் கண்டடைய முடியும். அதைத்தான் உண்மையான வாய்ப்பாக கருதுகிறேன்'' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘இனி உன்ன இந்த ஏரியா பக்கமே பாக்க கூடாது’ சஹாலை வறுத்தெடுத்த கிறிஸ் கெயில்!