2019ஆம் ஆண்டிற்கான மகளிர் உலகக்கோப்பைக் கைப்பந்துத் தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஏழாவது லீக் சுற்றில் நெதர்லாந்து அணி தென் கொரிய அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய நெதர்லாந்து அணி 25-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் செட்டைக் கைப்பற்றியது. அதன்பின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் காட்டிய தென் கொரிய அணி இரண்டாவது செட் கணக்கை 25-21 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி நெதர்லாந்திற்கு அதிர்ச்சியளித்தது.
அதன்பின்னர் தனது வெறித்தனமான ஆட்டத்தை காண்பித்த நெதர்லாந்து அணி மூன்றாவது, நான்காவது செட்கணக்குகளை 25-22, 25-23 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பை கைப்பந்துத் தொடரின் ஏழாவது சுற்றில் நெதர்லாந்து அணி 3:1 என்ற அடிப்படையில் தென் கொரிய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைக் கைப்பந்துத் தொடரில் நெதர்லாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி, ஐந்து போட்டிகளில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் சந்தித்து 16 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: