ETV Bharat / sports

வெற்றிப்பாதைக்கு திரும்பிய தலைவாஸ்; பாட்னாவுக்கு தொடரும் தோல்வி!

author img

By

Published : Aug 5, 2019, 9:48 AM IST

பாட்னா: ப்ரோ கபடி லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-28 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

தமிழ் தலைவாஸ்

ப்ரோ கபடி லீக்கின் 7ஆவது சீசன் போட்டிகள் தற்போது பாட்னாவில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸை எதிர்கொண்டது.

முதல் பாதியில் அதிரடி காட்டிய ஹரியானா வீரர்

கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது தமிழ் தலைவாஸ் அணி. ஆனால் ஆரம்பம் முதலே ஹரியானா அணி சிறப்பாக ஆடியதால், தமிழ் தலைவாஸ் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்திலேயே தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து புள்ளிகள் வித்தியாசமும் அதிகரித்தது. முதல் பாதி முடிவில் 8-19 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் பின்தங்கியிருந்தது.

புள்ளிகள் எடுக்கும் முனைப்பில் ஹரியானா வீரர்

இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் போக்கை மாற்றியது அஜய் தாகூர் - ராகுல் சௌத்ரி இணை. முக்கியமாக ராகுல் சௌத்ரியின் சிறப்பான ஆட்டம் காரணமாகத் தமிழ் தலைவாஸுக்கும் ஹரியானாவுக்கும் இடையே இருந்த புள்ளிகள் வித்தியாசம் குறைந்துகொண்டே வந்தது. 2ஆவது பாதியின் 5ஆவது நிமிடத்தில் ஹரியானா அணி ஆல் ஆவுட் ஆனது. முதல் பாதியில் சொதப்பிய மஞ்சீத் சில்லரும் ஃபார்ம்முக்கு திரும்ப, ஆட்டம் படிப்படியாக ஹரியானா கையைவிட்டு போக ஆரம்பித்தது.

அட்டகாசமாக ஆடும் ராகுல் சௌத்ரி
அட்டகாசமாக ஆடும் ராகுல் சௌத்ரி

ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. அதிகபட்சமாக ராகுல் சௌத்ரி 14 புள்ளிகள் எடுத்தார். இதற்குப் பின் நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் 41-20 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னாவை பந்தாடியது புனேரி பல்டன். இது பாட்னா அணி தனது சொந்த மண்ணில் பெறும் இரண்டாவது தோல்வியாகும்

பாட்னா வீரரை மடக்கிபிடிக்கும் புனே வீரர்கள்

Intro:Body:

Pro kabbadi league match result

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.