ETV Bharat / sports

தமிழ் தலைவாஸை வீழ்த்திய பாட்னா பைரட்ஸ் அணி - Patna Pirates vs tamil thalaivas

புரோ கபடியில் தமிழ் தலைவாஸும், பாட்னா பைரட்ஸும் மோதிய 16ஆவது லீக் போட்டியில் பாட்னா அணி 24-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Patna Pirates vs tamil thalaivas
author img

By

Published : Jul 29, 2019, 10:53 PM IST

புரோ கபடியின் 7ஆவது சீசன் ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று 16ஆவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் பாட்னா பைரட்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் 11-11 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன.

தமிழ் தலைவாஸ்  பாட்னா பைரட்ஸ்  புரோ கபடி  Patna Pirates vs tamil thalaivas  Pro Kabaddi
முதல் பாதி முடிவில்

இந்நிலையில் இரண்டாவது பாதியின் தொடக்கத்திலிருந்தே பாட்னா பைரட்ஸ் டிஃபெண்டிங்கில் புள்ளிகளை குவிக்கத்தொடங்கியது. தமிழ் தலைவாஸின் முக்கிய ஆட்டக்காரர்களான அஜய் தாக்கூர் மற்றும் ராகுல் செளத்ரியை பாட்னா அணியினர் டிஃபெண்டிங்கில் பிடித்ததால் பாட்னாவின் புள்ளிகள் உயர்ந்தன.

பாட்னா பைரட்ஸ்

பின் தமிழ் தலைவாஸ் கடைசி மூன்று நிமிடங்களில் ஆக்கோரஷமாக ஆடியது. இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் 24-23 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா அணி வென்றது.

தமிழ் தலைவாஸ்

இதில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸின் ரைடர் ராகுல் சௌத்ரி 5 புள்ளிகளையும் பாட்னாவின் டிஃபெண்டர் ஜெய்தீப் 7 புள்ளிகளையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் பாட்னா அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது

Intro:Body:

Pro Kabaddi 2019:Tamil Thalaivas vs Patna pirates

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.