ETV Bharat / sports

37வது தேசிய விளையாட்டு போட்டி : தடகளத்தில் தமிழக வீரர் தங்கம் வென்று சாதனை! வாள்வீச்சில் பவானி தேவி தங்கம்! - SS Sneha

37th Goa National Games : 37வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வி.கே.இலக்கியதாசன் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 10:08 AM IST

கோவா: 37வது தேசிய விளையாட்டு போட்டியை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இந்த போட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர். அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியானது அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தங்க மகள்: தமிழக வாள்வீச்சு வீராங்கனை பாவனி தேவி, கேரளாவை சேர்ந்த செளமியாவை வீழ்த்தி தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் 37வது தேசிய விளையாட்டில் தமிழகத்திற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார். 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில், காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திர் ஹாலில் வாள்வீச்சில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேரில் பவானி தேவியும் ஒருவராவார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் நேற்று (ஆக். 29) நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆடவர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வி.கே.எலக்கியதாசனும் மகளிர் பிரிவில் கர்நாடகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.சினேகாவும் தங்க பதக்கம் வென்றனர். இலக்கியதாசன் 10.36 விநாடிகளிலும், சினேகா 11.45 வினாடிகளில் இலக்கை அடைந்து பதக்கம் வென்றனர்.

இதன் மூலம் தேசிய விளையாட்டு போட்டியில் அதிவேகமாக இலக்கை அடைந்தவர்கள் என்ற பெருமையை இருவரும் பெற்றனர். ஆண்களுக்கான பளூதூக்கும் போட்டியில் தமிழகத்தின் எஸ்.ருத்ரா 343 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கமும், பஞ்சாபின் ககன்தீப் கில் 339 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அதேபோல் விருதுநகர் டிக்கெட் மையத்தில் பணியாற்றி வரும் ருத்ரமாயன் 109 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் மேற்கு வங்கம் அணியை 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வென்றது. நீச்சல் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீஹரி நட்ராஜ் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் கேரளாவின் சஜன் பிரகாஷை பின்னுக்கு தள்ளி ஸ்ரீஹரி முதல் இடம் பிடித்தார். பதக்க பட்டியல்: கோவாவில் நடைபெற்று வரும் 37வது தேசிய விளையாட்டில் மகாராஷ்டிரா 100 பதக்கங்களுடன் (41 தங்கம், 29 வெள்ளி, 30 வெண்கலம்) பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹரியான 41 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், சர்வீசஸ் அணி 27 பதக்கங்களுடன் முன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழக அணி 20 பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:IND VS ENG: இந்திய அணி அபார வெற்றி! பும்ரா, ஷமி அபாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.