2019ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தோகா நகரின் கலீஃபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான குண்டுஎறிதல் போட்டியில் இந்தியாவின் தஜிந்தர் சிங் கலந்துகொண்டார்.
அதில் 20.22 மீ தூரம் குண்டு எறிந்து தஜிந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றார். சீனாவின் வு ஜியாக்யங் 20.03 மீ தூரம் குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், கஜகஸ்தானின் இவான் 19.09 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தங்கப்பதக்கம் வென்றது குறித்து தஜிந்தர் சிங் பேசுகையில், "21 மீ தூரம் ஏறிய வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தேன். இந்த இலக்கினை அடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.