உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் முதல் சுற்றின் 74 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சுசில் குமார் அஜர்பைஜான் நாட்டின் காட்ஜிமுராட் காட்ஜியேவை(khadzhimurad gadzhiyev) எதிர்கொண்டார்.
இப்போட்டியில் காட்ஜிமுராட் 11 - 09 என்ற புள்ளிகளில் இருமுறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுசில் குமாரை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் சுசில் குமார் உலகக்கோப்பை மல்யுத்தத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.
இத்தோல்வியின் மூலம் சுசில் குமார் ரீ-பேஜ்(Repage) முறையில் வெண்கலப் பதக்கத்துகான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு சுசில் குமார் தகுதிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, ரவிக்குமார் அடுத்து ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.