கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இப்பெருந்தொற்றால் உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றால் அது ஸ்பெயின் தான். அங்கு இதுவரை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் சீன ஒலிம்பிக் கூட்டமைப்பு(சிஒசி), 9,000 என்.95 ரக முகக் கவசங்களை ஸ்பெயின் ஒலிம்பிக் கூட்டமைப்பிற்கு பரிசாக வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்பெயின் ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் அலெஜான்ட்ரோ பிளாங்கோ(Alejandro Blanco),
-
Earlier today, in a videoconference with International Olympic Committee Vice President Juan Antonio Samaranch, and our Secretary-General Victoria Cabezas, we briefed Spanish and Chinese media about a donation of 9,000 masks by the Chinese Olympic Committee to @COE_es pic.twitter.com/qx7X26mcDn
— Alejandro Blanco (@COE_Presidente) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earlier today, in a videoconference with International Olympic Committee Vice President Juan Antonio Samaranch, and our Secretary-General Victoria Cabezas, we briefed Spanish and Chinese media about a donation of 9,000 masks by the Chinese Olympic Committee to @COE_es pic.twitter.com/qx7X26mcDn
— Alejandro Blanco (@COE_Presidente) April 17, 2020Earlier today, in a videoconference with International Olympic Committee Vice President Juan Antonio Samaranch, and our Secretary-General Victoria Cabezas, we briefed Spanish and Chinese media about a donation of 9,000 masks by the Chinese Olympic Committee to @COE_es pic.twitter.com/qx7X26mcDn
— Alejandro Blanco (@COE_Presidente) April 17, 2020
இந்த இக்கட்டான சூழலில் சீன ஒலிம்பிக் கூட்டமைப்பு எங்களுக்கு செய்துள்ள இந்த உதவிக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் நீண்ட காலமாக எங்களது விளையாட்டு நிலை குறித்து கவலைத்தெரிவித்து வருகின்றனர். ஆனால் எங்களால் தற்போது நாட்டு மக்களின் நிலை குறித்து மட்டுமே சிந்திக்க முடிவும் என்பதால், எந்த விளையாட்டிற்கான அறிவிப்புகளையும் தற்போது வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘டாடி கூல்’ பாடலுக்கு மகனுடன் கூலாக நடனமாடி அசத்தும் தவான் !