தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் விளையாட்டு போட்டிகள் நேபாளத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த கைப்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி இலங்கையை சந்தித்தது. இலங்கையை 27-25, 25-19, 21-25, 25-21 என தோற்கடித்தது.
இதேபோல் பாகிஸ்தான் வங்கதேசத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் 25-15, 25-21, 26-24 என வங்க தேசத்தை வீழ்த்தியது. இந்த நிலையில் இறுதிப் போட்டி வருகிற செவ்வாய்க் கிழமை (டிச3) நடக்கிறது.
இதில் இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க : ஆர்ச்சரின் நிறத்தை கேலி செய்த இங்கிலாந்து ரசிகர்?