ETV Bharat / sports

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா அசத்தல்!

உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் தொடரின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர், மகளிர் பிரிவுகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளது.

Shooting World Cup: India clinch silver medal in men's 10m air rifle team event

author img

By

Published : Mar 21, 2021, 6:13 PM IST

சர்வதேச துப்பாக்கிச்சூடு விளையாட்டு கூட்டமைப்பினால் நடத்தப்படும் உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன.

இன்று (மார்ச் 21) நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகளுக்குக்கு இடையேயான இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆடவர் பிரிவில் இந்திய அணி, வியட்நாம் அணியுடன் மோதியது.

இப்போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த சௌரப் சௌத்ரி, அபிஷேக் வர்மா, ஷாஜார் ரிஸ்வி இணை 17-11 என்ற புள்ளிக்கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தி, தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றது.

அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் யஷஸ்வினி சிங் தேஸ்வால், மனு பாக்கர், ஸ்ரீநிவேதா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, போலாந்து இணையுடன் மோதியது. இப்போட்டியின் முடிவில் இந்திய மகளிர் அணி 16-8 என்ற கணக்கில் போலாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் ஆர்ச்சர் பங்கேற்பது சந்தேகம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.