தென் ஆப்பிரிக்காவின் போட்செஸ்ட்ரூமில் சர்வதேச தடகளப் போட்டி (ஏ.சி.என்.டபள்யூ லீக்) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில், 85 மீட்டர் தூரம் ஈட்டியை வீசும் வீரர்கள் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஷிவ்பால் சிங் தனது ஐந்தாவது முயற்சியில், 85.47 மீட்டர் தூரம் வரை ஈட்டி வீசினார். இதனால், நீரஜ் சோப்ரா வரிசையில் ஈட்டி எறிதல் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தத் தொடரில் நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றிருந்தார். ஷிவ்பால் சிங் கடந்தாண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 86.23 மீட்டர் தூரம் ஈட்டி வீசி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இதையும் படிங்க: 'ஸ்னோ போர்டிங் விளையாட்டு விரைவில் பிரபலமடையும்!'