தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தேனி மாவட்டம் சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய போட்டிகள் நேற்று இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்தது.
இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர் 600 பேர் கலந்துகொண்டனர்.
இதில், சப் - ஜூனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் வயது, எடைகளின் அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் 11 முதல் 17 வயது வரையிலும் 25 கிலோ முதல் 70 கிலோ எடைக்கு மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்தச் சிலம்பம் போட்டியில் வேல்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள் வீச்சு, சிலம்பாட்ட உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவியர் சிறப்பாக சிலம்பாட்டம் ஆடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்தச் சிலம்பம் போட்டிகளை ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: சாஃப்ட் பேஸ் பால்: தங்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு!