சீனாவின் செங்டு நகரில் வரும் அக்டோபர் 18 முதல் 20ஆம் தேதி வரை டேபிள் டென்னிஸ் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்க இந்திய வீரர் சத்தியன் தகுதி பெற்றுள்ளார்.
சமீபத்தில், ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் இவர் காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, 5 முதல் 8 ஆம் இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய வீரர் சத்தியன், சீனதைபேவின் லின் யுன் ஜூவிடம் 4-11, 8-11, 8-11, 14-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து ஆறாவது இடத்தை பிடித்தார்.
இதனால், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார். சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சத்தியன் 8338 புள்ளிகளுடன் 28ஆவது இடத்தில் உள்ளார்.