இந்திய விளையாட்டு ஆணையம் சார்பாக 2 ஆயிரத்து 783 கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு 5.78 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதில் ஒபிஏ (Out of Pocket Allowance) என்பது ஒவ்வொரு வருடமும் ரூ. 1.20 லட்சமாகும். இம்முறை இது கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைகள் கேலோ இந்தியா அகாடமியில் வழங்கப்பட்ட உணவு, படிப்பு, பயிற்சி, தங்குமிடம் ஆகியவற்றிற்காக செலவு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திறமை மேம்பாடு (கேஐடிடி) திட்டத்தின்படி இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
24 விளையாட்டு பிரிவுகளில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் OPA திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
உள்நாட்டு விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக கேலோ இந்தியா உதவித்தொகையின் ஒரு பகுதியாக 227 கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மொத்தம் ரூ.45.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'எத்தனை சவால் வந்தாலும் வேற லெவல்ல டி20 உலகக்கோப்பையை நடத்திக் காட்டுவோம்'