ETV Bharat / sports

UEFA Champions League Final: கோப்பையை தூக்கிய மார்செல்லோ - 14ஆவது முறையாக சாம்பியனானது ரியல் மாட்ரிட்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் லிவர்பூல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி 14ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

UEFA Champions League
UEFA Champions League
author img

By

Published : May 29, 2022, 6:57 AM IST

Updated : May 29, 2022, 7:22 AM IST

பாரீஸ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (மே 29) அதிகாலை நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்தின் லிவர்பூல் அணியும், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.

2ஆம் பாதியில் மிரட்டிய மாட்ரிட்: இரு அணிகளும் தொடர்ச்சியாக கோல் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இருப்பினும், முதல் பாதியில் ஒரு கோல் கூட பதிவாகவில்லை. தொடர்ந்து, இரண்டாம் பாதி தொடங்கியவுடன் ரியல் மாட்ரிட் அணி திடீரென வேகமெடுத்தது. இந்நிலையில், போட்டியின் 59ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

கோட்டை சுவரான கோர்டோயிஸ்: இதற்கு பதிலடி கொடுக்க லிவர்பூல் வீரர்கள் கடுமையாக போராடினாலும், ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் கோர்டோயிஸ் தடுப்புச்சுவராக நின்று அனைத்து முயற்சிகளையும் தகர்த்தார். ஏறத்தாழ எதிரணியின் 3 கோல் முயற்சிகளை தடுத்த கோர்டோயிஸ், குறிப்பாக, 82ஆவது நிமிடத்தில் முகமது சாலா கோல் கம்பத்திற்கு மிக அருகில் அடித்த ஷாட்டை அருமையாக தடுத்து அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

2018க்கு பின்...: இதன்மூலம், 90 நிமிடங்களுக்கு பின் வழங்கப்பட்ட ஐந்து நிமிட கூடுதல் நேரத்திலும், லிவர்பூல் கோல் ஏதும் அடிக்கவில்லை. எனவே, ஆட்டநேர முடிவில் 1 - 0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இது அந்த அணி வெல்லும் 14ஆவது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையாகும். கடைசியாக, ரியல் மாட்ரிட் அணி 2018ஆம் ஆண்டு சாம்பயின் லீக் கோப்பையை வென்றிருந்தது. மேலும், பிரேசில் நாட்டு வீரரும், ரியல் மாட்ரிட் அணி கேப்டனுமான மார்செல்லோ கோப்பையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • 🏆 1956
    🏆 1957
    🏆 1958
    🏆 1959
    🏆 1960
    🏆 1966
    🏆 1998
    🏆 2000
    🏆 2002
    🏆 2014
    🏆 2016
    🏆 2017
    🏆 2018
    🏆 2022

    Real Madrid have won the European Cup/Champions League twice as many times as any other team in history 😱#UCLfinal pic.twitter.com/Fk6nmUCpCL

    — Football on BT Sport (@btsportfootball) May 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: இறுதிவரை போராடு, உன் மீது நம்பிக்கைகொள் - தாமஸ் கோப்பையின் தாரக மந்திரம்! ஸ்ரீகாந்த் சுவாரஸ்யம்

Last Updated : May 29, 2022, 7:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.