ETV Bharat / sports

சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் - அரசுக்கு ரவிக்குமார் தாஹியா நன்றி

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ரவிக்குமாரின் சொந்த கிராமமான நஹ்ரியில் மல்யுத்திற்கான உள்அரங்க மைதனாம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு ரவிக்குமார் தாஹியா நன்றி தெரிவித்துள்ளார்.

Ravi Dahiya, ரவிக்குமார் தாஹியா
Ravi Dahiya thanks CM for announcing indoor wrestling stadium in Nahri
author img

By

Published : Aug 7, 2021, 4:44 PM IST

சண்டிகர் (ஹரியானா): டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றார். இதையடுத்து, அவருக்கு முதல்நிலை அரசு வேலை, பரிசுத்தொகையாக ரூ.4 கோடி ரூபாய், ஹரியானவில் எந்த இடத்தில் வேண்டுமானலும் 50 விழுக்காடு சலுகையில் நிலம் வாங்கிக்கொள்ளலாம் போன்ற பல சலுகைகளை ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

மல்யுத்த மைதானம்

மேலும், சோனிபட் நகரத்தில், மல்யுத்த வீரர் ரவிக்குமாரின் தாஹியாவின் சொந்த ஊரான நஹ்ரி கிராமத்தில் மல்யுத்தத்திற்கான உள்அரங்க மைதானம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

அரசின் அளித்துள்ள சலுகைகளுக்கும், புதிய மைதானத்தின் கட்டுமான அறிவிப்புக்கும் ரவிக்குமார் தாஹியா, அம்மாநில முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் காணொலி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ட்வீட்

முன்னதாக, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில," டோக்கியோ ஒலிம்பிக்கில் நாட்டிற்கு பதக்கம் வென்று கொடுத்து, ஹரியானா மக்கள் அனைவரையும் பெரும்படுத்தியுள்ளீர்கள், இதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களைப் போன்ற திறமையான விளையாட்டு விரர்களை ஊக்குவிப்பதற்காக பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளேன். இதன்மூலம், ஹரியானாவை மிகப்பெரிய விளையாட்டு மையமாக நாம் மாற்ற வேண்டும்" எனப் பதிவிட்டது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பதக்கம் வெல்ல முடியவில்லை - அதிதி அசோக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.