பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர். இவர் ஜோர்டானில் அண்மையில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று தொடரில் மகளிர் 60 கிலோ எடைப்பிரிவில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதுமட்டுமின்றி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதிபெற்றார்.
இந்நிலையில், மரியாதை நிமித்தமாக சிம்ரன்ஜித் கவுர், அவரது தாயார் ஆகியோரை பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். அச்சந்திப்பின் முடிவில் சிம்ரன்ஜித் கவுருக்கு பரிசுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். ஜோர்டானில் நடைபெற்ற அந்தத் தொடரின் மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியாவிலிருந்து ஒன்பது குத்துச்சண்டை வீரர்கள் தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனது ஒலிம்பிக் கனவு நனவானது - மனிஷ் கவுசிக்!