வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் (வெள்ளை தோலுடையவர்கள்) அணிக்காக புரோ புட்பால் (அமெரிக்க கால்பந்து) விளையாடிய முதல் ஆப்ரிக்க அமெரிக்கரான பாபி மிட்செல் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரின் மரணத்தை புரோ புட்பால் சங்கமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்றைய தினம் புரோ புட்பாலுக்கு ஒரு கறுப்பு தினம் என்று அந்த அறிக்கை சோகங்களை தன்னகத்தே தாங்கி நீள்கிறது. பாபி மிட்செல் மகத்தான வீரர். பல சோதனைகளை கடந்து இந்த நிலைக்கு முன்னேறினார்.
இவருக்கு 1983ஆம் ஆண்டு ஹால் ஆஃப் பேம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமெரிக்கன் புரோ புட்பாலில் மிட்செல் பல பரிமாணங்களை பார்த்தவர். மிகுந்த ஈடுபாட்டுடன் விளையாடக் கூடியவர் என அவரது ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
அமெரிக்கன் புரோ புட்பால் என்பது ரக்பி போன்ற விளையாட்டு. இருப்பினும் இரண்டு விளையாட்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு.
மைதானத்தின் அளவும் மாறுபடும். ரக்பி வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதக் கூடாது. ஆனால் அமெரிக்கன் புரோ புட்பால் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டே ஆடுவார்கள்.
அதற்கு ஏற்றால் போல் உடை, முகக் கவசம் அணிந்திருப்பார்கள். அவர்களை பார்க்கும் போது ஆஜாபாகுவான தோற்றத்தில் காட்சியளிப்பார்கள்.