கனடா நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் வலு தூக்குதல் போட்டியில் 72 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்த்தி அருண் பங்குபெற்றார். இவர் இந்தப்பிரிவில் இந்தியாவிற்காக ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
ஆர்த்தி அருண் கடந்த ஆசிய சாம்பியன்ஷிப் வலு தூக்குதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தவர்.
சென்னையைச் சேர்ந்த இவர் அறுவைசிகிச்சை மருத்துவர் ஆவார். மேலும் இவர் இரு குழந்தைகளுக்குத் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தந்த விவசாயி மகள்