ETV Bharat / sports

ஒலிம்பிக் தள்ளிவைப்பு; ஐ.ஒ.சி.க்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் இழப்பு!

கரோனா தீநுண்மி காரணமாக டோக்கியோவில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் இழப்பு நேரிட்டுள்ளதாக அதன் தலைவர் தாமஸ் பாச் தெரிவித்துள்ளார்.

Postponing Games will cost IOC 'several hundred million dollars', says IOC chief

author img

By

Published : Apr 30, 2020, 2:58 PM IST

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.) சார்பில் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், கரோனா தீநுண்மி பெருந்தொற்று காரணமாக இந்தத் தொடர் அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் இழப்பு நேரிட்டுள்ளதாக அதன் தலைவர் தாமஸ் பாச் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதால் நேரிட்ட பல நூறு மில்லியன் டாலர் இழப்புகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எனவே இப்போட்டிக்காக நாங்கள் ஏற்கனவே வழங்கவிருந்த அனைத்து சேவைகளையும் மீண்டும் மறு ஆய்வுசெய்ய வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட இப்போட்டிக்கு ஏற்படும் செலவுகளுக்கும், செயல்பாட்டுச் சுமைகளுக்கும் ஐ.ஓ.சி. தொடர்ந்து பொறுப்பேற்கும்.

ஐ.ஒ.சி.க்கு இருப்புத் தொகை ஒரு பில்லியன் டாலர் இருந்ததால்தான் இப்போட்டி ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய சூழலில் கரோனா தீநுண்மிக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால், பொதுமக்களின் சுகாதாரம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என நாம் கருதலாம். பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு விளையாட்டும், உடல் செயல்பாடும் பெரும் பங்களிப்பை அளிக்கிறது" என்றார்.

அடுத்த ஆண்டுக்குள் கரோனா தீநுண்மி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல்போனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்துசெய்யப்படும் என அந்தப் போட்டியின் அமைப்புக் குழுத் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் டாப் 10... இந்தியா இடம்பிடிப்பது சாத்தியம்தான் - கிரண் ரிஜிஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.