ETV Bharat / sports

குத்துச்சண்டைஉலக சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்றார் கெலாட்! - pooja gehlot won silver on 53kg catagory

புடாபெஸ்ட்: அண்டர் 23 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பூஜா கெலாட் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

Pooja gehlot wins dilver
author img

By

Published : Nov 2, 2019, 5:01 PM IST

'அண்டர் 23' எனப்படும் 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடர் ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பூஜா கெலாட், ஜப்பானின் ஹருணா ஒகுனோவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹருணா 2-0 என்ற கணக்கில் பூஜா கெலாட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பறினார். இத்தோல்வியின் மூலம் பூஜா கெலாட் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடரில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதற்கு முன் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இதேத் தொடரில் இந்தியாவின் ரிட்டு போஹத் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜோகோவிச்சை வீழ்த்தணும்னா இத செய்யுங்க - டிப்ஸ் கொடுக்கும் நடால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.