உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி நமிபியா அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டாம் தொடங்கியது முதலே தனது வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணி, நமிபியாவை பந்தாடியது. இப்போட்டியின் முதல் பாதி முடிவிலேயே தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டிக்கான வெற்றியை உறுதிசெய்தது.
-
HIGHLIGHTS: @Springboks score nine tries against Namibia in Pool B at Rugby World Cup 2019 #RWC2019 #RSAvNAM pic.twitter.com/v3Xn3BFilM
— Rugby World Cup (@rugbyworldcup) September 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">HIGHLIGHTS: @Springboks score nine tries against Namibia in Pool B at Rugby World Cup 2019 #RWC2019 #RSAvNAM pic.twitter.com/v3Xn3BFilM
— Rugby World Cup (@rugbyworldcup) September 28, 2019HIGHLIGHTS: @Springboks score nine tries against Namibia in Pool B at Rugby World Cup 2019 #RWC2019 #RSAvNAM pic.twitter.com/v3Xn3BFilM
— Rugby World Cup (@rugbyworldcup) September 28, 2019
இறுதியில் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 57-03 என்ற புள்ளி கணக்கில் நமிபியா அணியை வீழ்த்தி இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த அபார வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி குரூப் பி புள்ளிப்பட்டியலில் ஐந்து புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நமிபியா அணி இந்தப் பட்டியலில் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #rugbyworldcup2019: 'இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்பா' - அமெரிக்காவை புரட்டிப்போட்ட இங்கிலாந்து!