உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணி சமோவா அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி வீரர்கள் தங்களது வெறித்தனமான ஆட்டத்தை சமோவா அணியிடம் காட்டினர். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
ஸ்காட்லாந்து அணி ஒரு புறம் புள்ளிகளை உயர்த்திகொண்டே போக மறுபுறமோ சமோவா அணி ஒரு புள்ளியை எடுக்கும் முயற்சியில் ஆட்ட நேரம் முழுவதையும் எடுத்துக் கொண்டது.
-
HIGHLIGHTS: @scotlandteam v @manusamoa at Rugby World Cup 2019 #RWC2019 #SCOvSAM pic.twitter.com/m2ndVceh5T
— Rugby World Cup (@rugbyworldcup) September 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">HIGHLIGHTS: @scotlandteam v @manusamoa at Rugby World Cup 2019 #RWC2019 #SCOvSAM pic.twitter.com/m2ndVceh5T
— Rugby World Cup (@rugbyworldcup) September 30, 2019HIGHLIGHTS: @scotlandteam v @manusamoa at Rugby World Cup 2019 #RWC2019 #SCOvSAM pic.twitter.com/m2ndVceh5T
— Rugby World Cup (@rugbyworldcup) September 30, 2019
இதனால் ஆட்டநேர முடிவில் ஸ்காட்லாந்து அணி 37-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி ஐந்து புள்ளிகளைப்பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: எனக்கு மானத்தைவிட விக்கெட்தான் முக்கியம்...பேண்ட் கழன்ற பின்பும் ரன்-அவுட்