உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுவருகிறது. இதில் கமைஷி நகரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருந்த உருகுவே அணி பிஜி அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சம பலத்துடனே காணப்பட்டன. இரு அணியினரும் தங்களது திறமையான ஆட்டத்தால் யார் வெற்றிபெறுவார் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது.
-
INCREÍBLE
— Rugby World Cup (@rugbyworldcup) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Historic win for @RugbyUruguay, their first Rugby World Cup win since 2003 #RWC2019 #FIJvURU #RWCKamaishi pic.twitter.com/XG6SfKPbHC
">INCREÍBLE
— Rugby World Cup (@rugbyworldcup) September 25, 2019
Historic win for @RugbyUruguay, their first Rugby World Cup win since 2003 #RWC2019 #FIJvURU #RWCKamaishi pic.twitter.com/XG6SfKPbHCINCREÍBLE
— Rugby World Cup (@rugbyworldcup) September 25, 2019
Historic win for @RugbyUruguay, their first Rugby World Cup win since 2003 #RWC2019 #FIJvURU #RWCKamaishi pic.twitter.com/XG6SfKPbHC
ஆட்டநேர முடிவில் உருகுவே அணி 30-27 என்ற புள்ளிகளின் அடிப்படையில் பிஜி அணியை நூழிலையில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் உருகுவே அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து நான்கு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலுள்ளது. உருகுவே அணி 2003ஆம் ஆண்டிற்கு பிறகு உலகக்கோப்பை ரக்பி தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஜி அணி இத்தொடரில் பங்குபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிகள் ஏதுமின்றி பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க:#rugbyworldcup2019: முதல் வெற்றியைப் பதிவு செய்தும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா!